Monday, May 14, 2007

இட்லிவடைக்கு சட்னி

'இட்லி வடை' யின் பெரியார் பதிவுக்கு நாம் அளித்த சட்னி, சாரி, பின்னூட்டம்:

'பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை அடி' என்று பெரியார் சொன்னதாகச் சொல்லப்படுவதற்கு யாராவது ஆதாரம் கொடுக்க முடியுமா, ப்ளீஸ்.

பார்ப்பானை அவர் எதிரியாக நினைக்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் கடுமையாக விரோதித்தார் என்பதற்கு அவர் இராஜாஜியுடன் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு நல்ல உதாரணம். அரசியல் சமூக வானில் ஒரு பெரியார் தோன்றுவதற்கு இராஜாஜி காரணமாக இருந்தார் என்பது இறைச்சித்தம் தான்.

'மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டாத கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்' என்பதும் பெரியாரின் பொன்மொழி தான். அவரை ஒற்றைப்பரிமாணத்தில் காட்ட முனைந்த முனைப்பில் இத்தகைய கருத்துக்கள் காணாதொழிந்தன. திராவிடக் கட்சிகளே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

இன்றைக்கு பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடம் மட்டுமின்றி, அவர்களை விடவும் அதிகமாக, மற்ற ஆக்களிடம், மற்ற தளங்களிலும் இருக்கிறது என்பதை 'பக்தர்'களும் ஒத்துக்கொள்ள வேண்டும்.அதுபோல, பெரியாரை இன்னமும் ஈ.வே.ரா என்றே இன்னமும் விளித்து, இழிவுபடுத்துவதாக நினைக்கிற கேணத்தனத்தை '.......க்குஞ்சுகளும்' விட்டு விடவேண்டும்.

இன்றைய சமூக மாற்றத்துக்கு தலையாய காரணமான ஒருவரை 'பெரியார்' என்று ஏற்றுக்கொள்ள எந்த பாசமும் குறுக்கீடு செய்யக்கூடாது.பெரியாராக இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்படுவதில்லை என்பது பெரியாரே வலியுறுத்திய உண்மை.

பெண்ணியச்சிந்தனைகள் இன்று பட்டொளி வீசிப்பறக்க முதன்மை காரணம் பெரியார் தாம். யார் மறுக்க இயலும். ஒருபக்கம் எதிர்த்தாலும், அதன் தாக்கத்தால் அதை அதிகம் இன்று ஏற்றுச்செயல்படுத்துபவர்கள் பிராமண வகுப்பினரே என்பதும் உண்மை.பெரியாரின் தேவை தீர்ந்துவிடவில்லை என்பதை திராவிட இயக்கங்களே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பெரியாரைப் படமெடுத்துக்காட்டுவதை விடவும், ஆராய்ந்து படிப்பினை பெறுவதற்கு ஏராளமிருக்கிறது - இரு தரப்பாருக்கும்!
May 13, 2007 4:49 PM

7 comments:

வாசகன் said...

test

Thamizhan said...

பாம்பையும் பார்ப்பானையுங் கண்டால் பார்ப்பானை முதலில் அடி என்பது வட நாட்டுக் கிராமியப் பழ்மொழி.பெரியார் அதை அவ்வப்போது மேல்கோள் காட்டியுள்ளார்.
அவர் வாழ்நாளில் எந்த ஒரு தனி மனிதத் தாக்குதலும் செய்ததில்லை.உண்மையிலேயே காந்தீயத்தைக் காந்தியைவிடக் கடைப்பிடித்தவர்.ஒரு சிறு இழ்ப்பு கூட தனி மனிதருக்கோ,பொது சொத்திற்கோ இருக்கக்கூடாது என்று வற்புறுத்தித்தான் அத்தனைப் போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.

இந்த இட்லி,வடை சாம்பார் தன் தயாநிதி முன்னேற்றக் கழகப் பதிவில் ஒரு அநாமதேயக் கயவன் எழுதியுள்ள"வேசி மகன்" என்ற வார்த்தைகளை அனுமதித்துள்ளார்.அதற்கான என் கண்டனத்தைப் போடவில்லை.நான் அநாமதேய்த்தை முதலில் அவனது தாயாரிடம் கேட்டு உண்மை தெரிந்து கொள்ளச் சொல்லியும்,சாம்பாரை இதைக் கட்டுப் படுத்தியிருக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

வாசகன் said...

தோழர் தமிழனுக்கு.,
பெரியார் மேற்கோள் காட்டிய ஒன்றை அவருடைய 'பொன்மொழி'யாகவே ஆக்கியது யாருடைய அவசரம் என்று புரியவில்லை.

இட்லி வடையாரைப் பொறுத்தவரை, அவருடைய பதிவுகளில் அல்லாமல், சட்னியில், சாரி, பின்னூட்டத்தில் தான் காரத்தை - பிறவற்றின் மீதான இளக்காரத்தையும், இன அதிகாரத்தையும் அனுமதித்துக்கொள்கிறார். நீங்கள் சொல்வது சரியே, நானும் அவருக்கு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.

வாசகன் said...

வால்டர் வெற்றிவேல் ஐயா,
உங்கள் உணர்வுகளைப் புரிந்துக்கொள்கிறேன். அதற்கு என் ஆதங்கத்தையும் ஆதரவையும் தருகிறேன்.
ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் ஒரேஒரு வார்த்தை காரணமாக வெளியிட முடியாமல் போகிறது. மன்னிக்கவும்.
விசப்பாம்புகள் கடித்தால் பதிலுக்கு நாமும் கடிப்பதில்லியே, புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அதுசரி, இந்தப்பெயர் (வால்டர் வெற்றிவேல்) உங்களைக் கவர்ந்தது எவ்விதம்?

வாசகன் said...
This comment has been removed by the author.
Thamizhan said...

இட்லி, வடை எனும் சாம்பார் மிகவும் நல்ல பிள்ளை போல "வேசி மகன்" பதிவை இரண்டு நாட்கள் கழித்து,ஏதோ ஒன்றுமே நடக்காதது போலவும்,வேண்டுகோளுக்கு இணங்கி எடுத்து விட்டது போலவும் நடித்துள்ளதைக் கவனித்தீர்களா?
எதிர்த்துப் போட்ட பின்னூட்டங்களைப் போடும் துப்பும்,துணிவும் இல்லாத இதுகள் எல்லாம் தங்கள் வேடத்தை மாற்ற மாட்டார்கள்.

அதைத்தான் சொன்னார்கள்"புலி தன்து வரிகளை மாற்றிக் கொண்டாலும் இந்த ந்ரிகள் த்ங்கள் தங்கள் குணங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்" என்று.
அவர்களுக்குப் பின் பாட்டு பாடும் நம்மவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?

நளாயினி said...

sorry....

http://nalayinykavithikal.blogspot.com/2007/05/art-bye-nalayiny.html