BAD Taste
//வாசகன் said... நல்ல பதிவு ஜி.கே சார்.
தன்மதக்குறைகள்
தாராளமிருக்க
எம்மதக்குறையோ
எடுத்துச்சொல்லும்
சிறுமதியாளர் தம்மின்
செயலும் BAD Taste!
சர்ச்சையில் உழன்று
சங்கடம் விளைத்து
நலமொன்றுமின்றி
'நான்' எனத் தெரிய
நாட்கள் நகர்த்தும்
நண்பருக்கும் BAD Taste!
இலக்கியம் இனிமை
எதுவும் வேண்டார்.
விலக்காது வெறுப்பை
வேண்டிச் சுமப்பார்.
பின்னூட்டப் பிரியர்
பலருக்கும் BAD Taste! //
என்று கோவி.கண்ணன் ஐயா அவர்களுக்கு ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன்.
அதை கோவி.கண்ணன் ஐயா உற்சாகமாகப் பாராட்ட, 'அட நமக்கும் எழுத வருகிறதே' என்று நானும் பதிவு தொடங்கிவிட்டேன்.
//வாசகன் ஐயா,கவிதையை வடித்துகருத்தை சொல்லிவிட்டீர்கள்.நன்றாக இருக்கிறதுஎழுத்தும் பொருளும்.ரசித்தேன் கவிதையையும் கருத்தையும். //- கோவி.கண்ணன் அவர்கள் சொன்னது.
நன்றி GK சார்.
2 comments:
வாசகன் ஐயா,
அங்கேயும் சொல்லிவிட்டேன்... அவரவர் வீட்டிற்கு சென்று பாராட்டினால் இன்னும் சிறப்பு... !உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது... புதுக்கவிதையில் புகுந்து விளையாடுங்கள் !
பாராட்டுக்கள் !
//உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது... புதுக்கவிதையில் புகுந்து விளையாடுங்கள் !//
அப்படியா சொல்கிறீர்கள்?
மீண்டும் நன்றி ஜி.கே அவர்களே..!
Post a Comment