என்னத்த எழுத!
என்னத்த எழுத...என்று எண்ணிவந்ததாலேயே இதுவரை பிரயோசனமாக எதையும் வலைப்பதிய விரும்பாதிருந்தேன். ஆங்காங்கே சில கருத்துக்களை மட்டுமே தூவி வந்துள்ளேன்.
'எதையேனும் எழுது. எழுதுவது உனக்கோ, மற்றவருக்கோ... எப்போதாவது ஏதாவது நற்பலனளிக்கும் வகையில் இருக்குமாறு மட்டும் பார்த்துக்கொள்' என்று சில நண்பர்கள் சொன்னதால் சரீன்னு வலைப்பதிய வந்துட்டேன்.
படிச்சிட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோனுச்சுன்னா... சொல்லிட்டுப் போங்க.
3 comments:
//படிச்சிட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோனுச்சுன்னா... சொல்லிட்டுப் போங்க.//
எல்லோரையும் பார்த்து நாம் நம் எண்ணங்களையும் எழுத நினைப்போம். ஆனால் தயக்கமாக இருக்கும்... உள்ளே இருப்பது வார்த்தையில் வராது...முதலில் இப்படித்தான் இருக்கும்... நாம் படிக்கும் கருத்துக்களில் நமக்கு உள்ள மாற்றுக் கருத்தை வைத்து தனியாக எழுத ஆரம்பிக்கலாம். அல்லது படித்த பல ஏற்புடையவற்றை இன்னும் சிறப்பாக எழுதமுடியும் என்று எழுத முயற்சிக்கலாம் (BAD Taste கவிதை எழுதியது போல)
எல்லோரும் எண்ணங்கள் உண்டு திறக்கும் சாவியை மட்டும் தேடி கண்டுபிடித்து கையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
உங்களிடமிருந்து நல்ல கட்டுரைகள் கவிதைகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
கோவி.கண்ணன்
உங்கள் எண்ணங்களை வாசிக்க ஆவலாய் இருக்கிறேன். எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!
'வாசக'னின் முதல் வாசகராக வந்த கோவி.கண்ணன் அவர்களே! வருக, வருக!
உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முயலுவேன். நன்றி.
லொடுக்கு அவர்களே, உங்கள் வருகைக்கும் ஆவலுக்கும் நன்றி
Post a Comment