பேறுயர் வீரமும் உதவாத ஜிகாதும்!
பதிவர் 'நண்பன்' ஷாஜஹானின் இந்தப் பதிவுக்கு இப்படி பின்னூட்டமிட்டிருந்தேன். சிந்தனைக்குரிய பதிவு.
வாசகன் சொல்கிறார்...
சீரிய சிந்தனையைத் தூண்டும் சம்பவத்தை சிறப்பான கவிதையாக்கி இருக்கிறீர்கள்.
எச்சில் துப்பிய(என்னுடைய இக்கவிதைப் பின்னூட்டத்தில் சொல், பொருள் குற்றமிருப்பின் தெரிவியுங்கள்).
எதிரிக்கும்
காழ்ப்பு காட்டாத
கொள்கையின் கம்பீரத்தில்
பட்டொளி வீசும்
பேறுயர் வீரம்
போர்க்களத்திலும் அன்று!!
ஏகப்பட்ட இரத்தம்
சுவைத்த இச்சையில்
எச்சில் தேடி நீளும்
ஏகாதிபத்திய நாவுகளை
வெற்று உணர்ச்சியில் அமிழ்த்தி
உலர்ந்துப் போகும்
உதவாத ஜிகாது இன்று!!
2:11 PM
நண்பன் சொல்கிறார்...
ஜி, சல்மான், வாசகன் - மிக்க நன்றி.
வாசகன், கவிதை நன்றாக உள்ளது.
நீண்ட நாளைக்கப்புறம் பின்னூட்டத்தில் ஒரு கவிதை.
நன்றி.
அன்புடன்
நண்பன்...
----------------------------------------------
ஒரு நல்ல கவிஞரால் என் கவிதைப் பின்னூட்டமும், அதன் சொல்-பொருளும் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி!!
2 comments:
Helo!
This text is very good.
Tank you
Hello!
This poem is very good.
Tank you
Post a Comment